கட்டுப்படுத்த நினைப்போம்… பின்னர் முடியாமல் சேர்ந்து வாழ பழகி விடுவோம்; கொரோனாவும் மனைவியும் ஒன்றுதான்: அமைச்சர் சர்ச்சை பதிவு!


கொரோனா வைரஸை மனைவியருடன் ஒப்பிட்டுப் பேசிய இந்தோனேசிய அமைச்சர் முகமது மஹ்பூத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அன்றொரு நாள் எனக்கு ஒரு மீம் வந்தது. அதில், ‘கொரோனா நம் மனைவி போன்றது. முதலில் நாம் கட்டுப்படுத்தப் பார்ப்போம், பிறகு அது முடியாது என்று உணர்ந்து அதனுடன் வாழக் கற்றுக் கொள்வோம்’ என்று கூறப்பட்டிருந்ததை ஜோக் என்று நினைத்து அவர் பட்டவர்த்தனமாகப் பதிவிட, பெண்கள் அமைப்பும், சமூகவலைத்தள போராளிகளும் அவரை கண்டபடி விமர்சித்தனர்.

பெண்கள் ஒற்றுமை அமைப்பு, ‘கோவிட்-19 தொற்றை ஒழிப்பதில் அரசின் பொறுப்பற்ற தன்மையையும் பாலின பேத ஆணாதிக்க, பெண் விரோத கருத்துகளை எப்படி ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இவரது கூற்று தெளிவுபடுத்துகிறது” என்று சாடியுள்ளது.

இந்தோனேசியாவில் 24,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1496 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் இங்கு சோதிக்கப்படும் நபர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here