பிறந்த தினத்தில் பூர்வீக இல்லத்தில் ஆறுமுகனின் உடலுக்கு அஞ்சலி!


காலம் சென்ற ஆறுமுகன் தொண்டமானின் 56 ஆவது பிறந்த தினமான இன்று (29) அவரது பூதவுடல் ரம்பொடை வேவல்டனில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது.

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நேற்று பாராளுமன்ற அஞ்சலிக்கு வைக்கப்பட்டதுடன், ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் சபாநாயகர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என சகலரும் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமை காரியாலயமான “சௌமிய பவன்’ இல் வைக்கப்பட்டது.

நேற்றைய தினம் முழுவதும் கொழும்பில் உள்ள மலையக மக்கள், அரசியல் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இன்று மே மாதம் 29 ஆம் திகதியானது காலம்சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பிறந்த தினமாகும். இன்று காலை 8 மணிக்கு அவரது பூதவுடல் ரம்பொடை வேவல்டண்னில் அமைந்துள்ள அவரது பூர்வீக இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

இன்றைய நாள் முழுவதும் அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

பூதவுடல் நாளை 30 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு லபுக்கலை, நுவரெலியா, நானுஓய, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

நாளை மறுதினம் 31ஆம் திகதி கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இருந்து ஹட்டன் டிக்கோயா வழியாக நோவூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கிற்கு பூதவுடல் எடுத்து செல்லப்பட்டு பிற்பகல் 4 மணிக்கு இறுதிக்கிரியைகள் அரச மரியாதையுடன் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here