ரெலோவிற்குள் பிளவு: கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார் கணேஷ் வேலாயுதம்!

ரெலோ இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் கணேஷ் வேலாயுதம், ரெலோ அமைப்பிலிருந்து விலகுவதாக சற்று முன்னர் கட்சி செயலாளர் என்.சிறிகாந்தாவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக கட்சிக்குள் கணேஷ் வேலாயுதம் ஒதுக்கப்பட்டு வந்தார். அவர் மாகாணசபை தேர்தலை குறிவைத்திருந்ததால், அவரை கட்சியை விட்டு அகற்ற சிவாஜிலிங்கம் செயற்பட்டு வந்ததாக குற்றம் சுமத்தப்படுகிறது. வடமராட்சியில் இன்னொரு போட்டியாளர் உருவாகுவதை அவர் விரும்பியிருக்காததால், கணேஷ் வேலாயுதத்தை ஒதுக்கும் நடவடிக்கைகள் சூட்சுமமாக நடந்தன, இதில் கட்சி செயலாளர் சிறிகாந்தாவும் ஈடுபட்டார் என கணேஷ் தரப்பில் கூறப்படுகிறது.

அண்மையில் நெல்லியடியில் ரெலோ அமைப்பினால் வெலிக்கடை படுகொலை நினைவேந்தல் நடந்தபோதும், அதுபற்றி கணேஷ் வேலாயுதத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

அவரை கட்சியிலிருந்து ஒதுக்கும் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றதையடுத்து, கணேஷ் வேலாயுதம் தானாகவே கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here