ஹீராவிற்கு முன்னர் இந்த நடிகையைத்தான் அஜித் காதலித்தாராம்!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமாரின் காதல்கள் பற்றி, அவருக்கு நெருக்கமாக இருந்த ஒருவர் பேசியுள்ளார்.

அஜித், நடிகை ஷாலினியை காதலித்து கரம்பிடித்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார் என்பது தெரியும். ஷாலினியை காதலிப்பதற்கு முன் பல நடிகைகளிடன் காதலில் இருந்ததாக பல கிசுகிசுக்களும் வதந்திகளும் பரவியது.

சமீபத்தில் இவர் காதலித்த ஹீராவின் நிலை பற்றி வைரலானது. அதேபோல் கடந்த மே1ஆம் திகதி நடிகர் அஜித்தின் பிறந்த நாளுக்கு பல பிரபலங்கள் வாழ்த்தி வீடியோவும் மெசேஜ்ஜும் செய்து வந்தனர். அஜித்தை பற்றி அவருடன் பணியாற்றிய நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் காதல் குறித்த சிலவற்றை வெளிப்படையாக கூறியிருந்தார்.

நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்வதற்கு முன் அவருடன் சில படங்களில் நடித்த ஹீராவை காதலித்து வந்ததாகவும் பின் காதல் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதற்கு முன் பானுமதி படத்தில் நடித்த சுவாதி என்பவரை காதலித்து அவர் வீட்டிற்கு பெண் கேட்டு போனதாகவும் கூறியுள்ளார். மேலும் சுவாதியின் தாயார் என் மகள் நடிக்க வேண்டும் திருமண முடிவு இப்போதைக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து நடிகர் அஜித் ஷாலினியை காதலித்து கரம் பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here