இளம் நடிகை தற்கொலை!

க்ரைம் பேட்ரோல் தொடரில் நடித்த 25 வயது இளம் நடிகை பிரெக்‌ஷா மேத்தா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளும் இயங்குவதில்லை. இதனால் திரையுலகம் மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது.

சில நாள்களுக்கு முன்பு தொலைக்காட்சி நடிகர் மன்மீத் கிரேவால், பணப் பிரச்னை காரணமாக மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் மற்றொரு தொலைக்காட்சி நட்சத்திரமும் இதே முடிவை எடுத்துள்ளார்.

லால் இஷ்க், கிரைம் பேட்ரோல் போன்ற தொடர்களில் பிரெக்‌ஷா மேத்தா நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் ரத்தானதால் மும்பையிலிருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூருக்குச் சென்றார் பிரெக்‌ஷா.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக வேலை எதுவும் இல்லாததால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரெக்‌ஷா, தன்னுடைய வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில் பிரெக்‌ஷா மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.

தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன்பு தன்னுடைய மனநிலையை இன்ஸ்டகிராமில் வெளிப்படுத்தியுள்ளார். அதில், உங்களுடைய கனவு மரணிப்பது தான் மோசமான விஷயமாகும் என்று தன்னுடைய வேதனையைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வேலையில்லாத காரணத்தால் இரு தொலைக்காட்சி நட்சத்திரங்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது பாலிவுட்டிலும் சின்னத்திரை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here