கொரோனா கட்டுப்பாடுகளிற்கு எதிராக பெண் நூதன போராட்டம்!


கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 1 இலட்சத்தை கடந்து விட்டது.

கொரொனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இப்போதுவரை அமெரிக்காதான் பதிவாகியுள்ளது. ஆனால் அங்கே, தற்போது ஓரளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன.

லொக் டவுன் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த சமயத்தில், மாகாணங்கள் படிப்படியாக திறக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இருந்தார். அவர் இதை பகிரங்கமாக கூற தொடங்க, லாக் டவுனிற்கு எதிரான போராட்டங்கள் படிப்படியாக வெடித்தன.

தற்போதும் அமெரிக்காவில் முழுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி ஆங்காங்கே சில போராட்டங்கள் நடந்து வருகின்றன.

டேவிட்டா சால் என்ற கலைஞர், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விநோத போராட்டத்தில் ஈடுபட்டார். மருத்துவ அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முகக்கவசங்களை பாவித்து, உள்ளாடை பாணியில் தனது அந்தரங்க பகுதிகள், கண்களை  மறைத்திருந்தார். எனினும், மூக்கையோ, வாயையோ அவர் மறைக்கவில்லை.

கொரோனா கட்டுப்பாடுகளிற்கு எதிராக அவர் தொடர்ந்து பேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார். மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சதி நடவடிக்கை என, கொரொனா தடுப்பு நடவடிக்கையை அவர் ஏற்கனவே வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here