யாழில் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்து, கட்டி வைத்து பச்சை மட்டையால் அடித்த ஒருவன் கைது!


வடமராட்சி கிழக்கு குடத்தனையின் இரண்டு சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, கட்டி வைத்து தாக்கிய மூன்று ரௌடிகளில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதி பகுதியில் கடந்த 10ஆம் திகதி சிறுமிகள் இருவர், அந்த பகுதியை சேர்ந்த பிரபல ரௌடிகள் மூவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்.

சம்பவதினம் பிற்பகல் 2 மணிக்கு தனிமையான, பொதுஇடம் ஒன்றில் 16, 17 வயதான சிறுமிகள் இருவர் தமது ஆண் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அந்த பகுதிக்கு வந்த ரௌடிகள் மூவர் கலாச்சார காவலர்களாக மாறினர்.

சிறுமிகளின் ஆண் நண்பர்களை தாக்கி விரட்டிவிட்டு, சிறுமிகளை அங்கு கட்டிவைத்து, ஊர் மக்களை அழைத்து பச்சை மட்டையால் தாக்கியுள்ளனர். ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்தபோது கையும்  மெய்யுமாக பிடித்ததாக பொலிசாரிடமும் தகவல் வழங்கியுள்ளனர் அந்த மூன்று ரௌடிகளும்.

சிறுமிகளை மீட்ட பொலிசார், அவர்களை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனையில், தமக்கு நேர்ந்த துயரக்கதையை சிறுமிகள் தெரிவித்தனர். சிறுமிகள் இருவரும் பாலியல்ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி அறிக்கையிட்டுள்ளார்.

இதையடுத்து ரௌடிகளை தேடி பொலிசார் வலை விரித்தனர். அந்த ரௌடிகள் தலைமறைவாகிய நிலையில், நேற்று ஒருவன் கைதானான். அவன் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here