சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது!


மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகிபுரம் பாவற்கொடிச்சேனை காட்டுப் பகுதியில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று இரவு 8.30 மணியளவில் குறித்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை சட்ட விரோதமாக வைத்திருந்த ஒருவரை கைதுசெய்ததுடன் துப்பாக்கியை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here