அதிவேகம்… அவசரம் ஏற்படுத்திய வினை: விபத்தில் சிக்கியவர் பலி (சிசிரிவி காட்சி)


வவுனியா புகையிரதநிலைய வீதியில் கடந்த 15 ஆம் திகதி மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த குடும்பஸ்தர் இன்று (25) உயிரிழந்துள்ளார்.

குருமன்காடு பகுதியில் இருந்து புகையிரத நிலைய வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்துகொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்

அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததுடன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் பத்து நாட்களின் பின்னர் சிகிச்சை பலன் இன்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்,

சமயபுரத்தை சேர்ந்த கிறிஸ்டி (39) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விபத்து தொடர்பான சிசிரிவி காணொளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here