UPDATE: குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் மரணம்!


ஹற்றன் டிக்கோயா பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரே இன்று (25) காலை இந்த அனர்த்ததிற்கு இலக்கானார்.

ஹட்டன்- எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த, 48 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தாயான அம்பிகா மலர் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மேலும் 6 பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 8 பேர், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here