டொராண்டோ பூங்காவில் திருவிழாவாக திரண்ட மக்கள்!


கனடாவில் கொரொனா அபாயம் நீடித்து வரும் நிலையில், நேற்று (24) டொராண்டோ  டிரினிட்டி பெல்வுட்ஸ் பூங்காவில் திரண்டிருந்த கூட்டம் பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்ராரியோ மாகாண பிரீமியர் டொக் போர்ட், “ஏதோ ரொக் இசை நிகழ்ச்சி நடப்பதாக நான் நினைத்தேன். பொதுமக்கள் இப்படி நடந்தது ஏமாற்றமாக இருக்கிறது“ என்றார்.

பொதுமக்களை கையாள்வதில் பொலிசார் சரியாக நடக்கவில்லையென்ற விமர்சனமும் எழுந்துள்ளது. டொராண்டோ காவல்துறை கடுமையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், காவல்துறை தலைவர் மார்க் சாண்டர்ஸ் இது அதிகாரிகள் கணிக்கக்கூடிய சூழ்நிலை அல்ல என்றார்.

“நான் அதிகாரிகளிடம் பேசியுள்ளேன், அவர்கள் இதைப் போன்ற எதையும் பார்த்ததில்லை என்று அவர்களே சொன்னார்கள். இது மிகப்பெரிய கூட்டம்” என்றார்.

நேற்று பூங்காவில் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். பலர் முகக்கவசங்களையும் அணிந்திருக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here