வல்வைப் படுகொலை நினைவுநாள்!

வல்வைப் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. வல்வையில் வைத்து 1989ம் ஆண்டு இதே நாளில் இந்திய அமைதிப்படை இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 63 பொது மக்களும் இன்று நினைவு கூரப்பட்டிருந்தனர்.

1989 ம் ஆண்டு 08 ம் மாதம் 02 ம் திகதி வல்வெட்டித்துறையில் புலிகளுக்கும் இந்திய ஆக்கிரமிப்பு படைக்கும் நடந்த மோதலில் மோதலில் 09 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து, 2 ம், 3 ம், 4 ம் திகதிகளில் வல்வெட்டித்துறையில் மிக கோரத்தாண்டவம் ஆடியது இந்திய இராணுவம்.

1983 கண்ணிவெடி தாக்குதலையடுத்தே ஆடி கலவரம் நிகழ்ந்ததென அரசு கூறிவரும் நிலையில், 9 இந்திய இராணுவத்தினருக்காக இந்த படுகொலை நடந்ததாக இந்தியா கூறியது.

இன்று காலை 10:00 மணியளவில் வல்வெட்டித்துறையில். வல்வைப்படுகொலையில் இறந்த மக்களுக்காக கண்ணீர் வணக்கம் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here