ரிஸ்வான் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொன்ன அனுஷா


தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் குதித்த இளம் யுவதியின் உயிரை காப்பாற்றச் சென்று துரதிஸ்டவசமாக உயிரிழந்த ரிஸ்வானின் குடும்பத்தினருக்கு மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரனால் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டது.

எத்தனையோ பிரச்சினைகள் ஆங்காங்கே நடக்கின்றன. பார்த்தும் பார்க்காததை போல செல்பவர்கள் சிலர் , வேடிக்கை பார்ப்பவர்கள் சிலர், ஒரு சில நல்ல உள்ளங்கள் மட்டுமே மனிதநேயத்துடன் செயற்படுவர், அதிலும் தன்னுயிரை நீத்து பிற உயிரை காப்பாற்றுபவர்கள் இறைக்கு ஒப்பானவர்கள்.

சகோதரரின் குடும்பத்திற்கு முடிந்த உதவிகளை இப்பொழுது மட்டுமில்லாமல் தேவையான எல்லா சந்தர்ப்பங்களிலும் செய்வோம். ஆனால் அவரின் இழப்பை நிச்சயமாக ஈடு செய்யவே முடியாது எனவும் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here