திருமணமானதை மறைத்து உசைன் போல்ட் என்னுடன் பழகிப் பார்த்தார்: பிரிட்டன் அழகி பிரளயம்!


உலகின் அதிவேக மனிதன் உசைன் போல்ட், தன்னிடம் அந்தரங்க புகைப்படங்களை கேட்டார் என பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார் பிரிட்டனின் மொடல் அழகியான ஷரி ஹலிடே.

கடந்த கோடை காலத்தில் இரவு விடுதியில் சந்தித்த பின்னர் தாம் தொலைபேசியிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து அரட்டை அடித்து வந்ததாக தெரிவித்தார். அரட்டைகளின் போது செக்ஸியானவர் என தன்னை போல்ட் வர்ணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அரட்டைகளின் இடையே தனது அந்தரங்க புகைப்படங்களை கோரியதாகவும், தான் இரண்டு படங்கள் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு மனைவி இருப்பது பற்றி ஒரு போதும் போல்ட் கூறியிருக்கவில்லையென்றும், போல்ட்டிற்கு பெண் குழந்தை பிறக்கும் செய்தி சில நாட்களின் முன்னர் வெளியாகியபோதே அவர் திருமணமானவர் என்பதை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here