தோற்றத்தை பார்த்து செல்வராகவனை வெளியே விரட்டிய நடிகை… பின்னர் வாய்ப்பு தேடி போனார்!


இயக்குனர் செல்வராகவனின் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்த சம்பவமொன்று பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவரது உருவ தோற்றத்தை பார்த்து, பழம்பெரும் நடிகையொருவர் வீட்டுக்கு வெளியில் அனுப்பியுள்ளார்.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்றவர் செல்வராகவன்.

செல்வராகவனின் ஆரம்ப காலகட்டத்தில் பிரபல நடிகை ஒருவர் வீட்டிற்குள் விடாமல் உருவத்தை பார்த்து வெளியே தள்ளி கதவைச் சாத்திய செய்தியை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது யூடியூப் சேனல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த காலத்தில் மிகப் பெரிய நடிகையாக வலம் வந்தவர் வைஜெயந்தி மாலா. வைஜெயந்திமாலா தனது மகனை தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகப்படுத்த இயக்குனர்களை தேடிக் கொண்டிருந்தாராம். அப்போது செல்வராகவன் கதை சொல்ல அவரது வீட்டிற்குச் சென்றபோது அவரது உருவத்தை பார்த்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டாராம்.

அதன் பிறகு செல்வராகவன் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என ஹிட் படங்களை கொடுத்து பெரிய இயக்குனர் ஆகிவிட்டார். அதன் பிறகு மீண்டும் வைஜெயந்திமாலா தன்னுடைய மகனுக்கு ஒரு படம் செய்து தருமாறு செல்வராகவனிடம் கெஞ்சினாராம்.

ஆனால் செல்வராகவன் படம் பண்ணுவதற்கு இஸ்டம் இல்லை என கூறி ஒதுக்கி விட்டாராம்.

தன்னை உருவ கேலி செய்ததை இலைமறை காயாக செல்வராகவன் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here