இந்தவார ராசி பலன்கள் (24.5.2020- 30.05.2020)


கடந்த வாரங்களில் இருந்து வந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தாயாரால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். சிலருக்கு பூர்வ சொத்துக்களின் மூலம் வருமானம் வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால் பல நன்மைகளை பெறலாம். பெண்களுக்கு குடும்பச் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கலைஞர்கள் பொறுமையாக இருந்தால் எதிர்பார்த்த வாய்ப்பை பெறலாம்.

பரிகாரம் : முருகன் வழிபாடு நிம்மதி தரும்.

நிதி நிலையில் ஏற்ற இறக்கம் நிலவும். சுபநிகழ்ச்சிக்கான முயற்சிகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் அவை பிற்காலத்தில் நல்ல முறையில் நிகழும் என்பதால் பொறுமையுடன் இருங்கள். அலுவலகத்தில் சகஊழியர்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனை இல்லாமல் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். தந்தையின் உடல் நலம் சீரடையும். பெண்கள் தங்களது அன்றாட பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. பிள்ளைகளின் மூலம் பல நன்மைகள் நடக்கக்கூடும். கலைத்துறையினர் கடந்த நாட்களில் இருந்து வந்து சோதனைகளிலிருந்து விடுபடுவர்.

பரிகாரம் : சூரியபகவான் வழிபாடு நன்மை தரும்.

எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். பூர்வ சொத்துகளால் வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு பின் சரியாகும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுக்க வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பர். பெண்களுக்கு கணவர் வீட்டு உறவினர்களின் மூலம் பாராட்டும், புகழும் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பதற்கு கடுமையான உழைப்பு தேவை என்ற சூழ்நிலை உருவாகும். ஆடம்பரச் செலவுகளை செய்யாமல் பணத்தை சேமித்து வைத்தால் பிற்காலத்தில் உதவிகரமாக இருக்கும். கலைத்துறையினர் புகழ் பெறுவர்.

பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு துன்பம் போக்கும்.

பணவசதி போதுமானதாக இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை கேட்பது நல்லது. பிள்ளைகளால் ஏற்பட்டிருந்த சில பிரச்னைகள் முடிவுக்கு வரும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் மோசம் இல்லை. கலைஞர்கள் முயற்சியை அதிகப்படுத்துவதன் மூலம் அரிய வாய்ப்புகளைப் பெறலாம். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை பெருமிதத்துடன் ஏற்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

பரிகாரம் : சிவன் வழிபாடு சிரமத்தை குறைக்கும்.

கலைஞர்கள் சவாலான பணிகளை முடித்து சாதனை புரிவர். குடும்பத்தில் செலவுகள் அதிகரித்தாலும் அவை ஓரளவு சமாளிக்கக் கூடியதாகவே இருக்கும். அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை ஏற்பட்டாலும் அதைக் கட்டுப்படுத்துவது நல்லது. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மிக விரைவான முன்னேற்றத்தை அடைவர். வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ளுங்கள். பெண்கள் தங்களது ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவர். நண்பர்களிடம் கடந்த கால நினைவுகளை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள்.

பரிகாரம் : மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.

தன்னம்பிக்கையுடன் பொதுநல விஷயத்தில் ஈடுபட்டுப் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களது அலுவலக வேலையை மற்றவரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். புதியவர்களுடன் பழகும்போது ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நற்செய்தி உண்டு. பெண்களுக்கு ஆபரணச் சேர்க்கை தகுதிக்கேற்பவே கிடைக்கும். சுயதொழில் செய்பவர்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். கலைத் துறையினர் தங்கள் துறையில் நல்ல உச்சத்தில் செல்ல வாய்ப்புள்ளது.

பரிகாரம்: தன்வந்தரி வழிபாடு தொழிலில் உயர்வு தரும்.

அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உங்களுக்கு புதிய பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் உள்ள போட்டியை சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். பூர்வ சொத்தின் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். கலைத்துறையினருக்கு நன்மை தரும் திருப்பம் நிகழும். பெண்கள் சொந்த விஷயங்களுக்காக அடுத்தவர் ஆலோசனை கேட்பதை தவிர்க்க வேண்டும். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் குறையும். விரக்தி மனப்பான்மை மாறி சந்தோஷம் அதிகரிக்கும். வயதில் பெரியவர்களுடன் நட்புக் கொண்டு அவர்களின் அனுபவத்தை பெறுவீர்கள்.

பரிகாரம் : ராகவேந்திரர் வழிபாடு துயர் நீக்கும்.

மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். வாழ்கை துணைவர் அன்றாட வேலைகளில் ஆதரவாக இருப்பார். அலுவலக விஷயங்களில் உங்களுக்கு சகஊழியர்களின் உதவி கிடைக்கும். சகோதர, சகோதரிகளிடம் உறவு நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசினால் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம். பெண்கள் தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டாம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். புதுமணத் தம்பதியினருக்கு விருந்து உபசாரம் செய்து மகிழ்வீர்கள். பகைபாராட்டிய நண்பர்கள் இணைந்து கொள்வார்கள்.

பரிகாரம் : பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.

மனைவி வழி உறவினரின் உடல் நலம் காரணமாக மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் திடீர் இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நிறை குறைகள் இருந்தாலும் வரவேண்டிய பணத்தைக் கறாராக பேசி வசூல் செய்வீர்கள். பெண்களுக்குப் பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். தாய்மாமன் வகையிலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தியானம், பிடித்த இசையைக் கேட்பதன் மூலம் மனஅமைதியை பெறலாம். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் : 26.5.2020 நள்ளிரவு 12:25 – 29.5.2020 அதிகாலை 4:54 மணி
பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

மனதில் நினைத்தவை எல்லாம் நிறைவேறுவதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகும். பிள்ளைகளின் மூலம் சிறு சிறு மருத்துவ செலவுகள் வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பெண்கள் குடும்ப நலனில் மிகுந்த அக்கறை கொள்வர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள். பூர்வ சொத்து சம்பந்தமாக நல்ல முடிவை எடுப்பீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளை பெறுவர்.

சந்திராஷ்டமம் : 29.5.2020 அதிகாலை 4:55 – 30.5.2020 நாள் முழுவதும்
பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீரக்கும்.

மன தைரியம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் வீண் செலவுகள் உண்டாகும். நீண்ட நாளாக இருந்து வந்த ஒற்றைத் தலைவலி, நரம்புக் கோளாறுகள் தீர்ந்து நிம்மதியடைவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் நின்று போன தொகை வசூலாகும். அலுவலகத்தில் நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொண்டால் பல நன்மைகளை பெறலாம். தொழில் செய்பவர்கள் நிதானமாக யோசித்து எந்தவொரு செயலிலும் முடிவெடுங்கள். பிள்ளைகள் உங்களின் மனம் குளிரும் படி நடப்பார்கள். சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

பரிகாரம் : அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். குடும்ப பொருளாதாரத்தை பெருக்குவதற்கான பல முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினருடன் இருந்து வந்த மனஸ்தாபங்களை உங்களின் மனைவி சரிசெய்துவிடுவார். வாகனம், பெட்ரோல் மற்றும் எண்ணெய் தொடர்பான நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பதவி உயர்வு பெறுவர். வியாபாரத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எளிதாகச் சமாளிப்பீர்கள். மகளிடம் இருந்து நல்ல தகவல் வரும். புதிய நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். மாணவர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

பரிகாரம் : அம்பாள் வழிபாடு மகிழ்ச்சி தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here