கடைசி நிமிட அதிர்ஸ்டம்: பாகிஸ்தான் விமான விபத்தில் தப்பித்த பணி்ப்பெண்!

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் சுமார் 97 பேர் உயிரிழந்த நிலையில், விமானத்தில் செல்ல வேண்டிய விமானப்பணிப்பெண் ஒருவர் இறுதி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றத்தினால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

பாகிஸ்தான் இன்டர்நஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நேற்று லாகூரில் இருந்து கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது, எதிர்பாரதவிதமாக விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

97 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 பேர் உயிர் தப்பியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விமானத்தில் மதிகா இராம் என்பவர் பணிப்பெண்ணாக செல்ல வேண்டியது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், குறித்த விமானத்தில் பணிப் பெண்ணாக செல்லவிருந்தார். ஆனால், பணிப்பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக ஆனம் மசூத் என்ற பணிப் பெண் சென்றுள்ளார்.

இந்த விபத்தில் ஆனம் மசூத் உயிரிழந்தார். ஒரு வேளை பணிப் பட்டியலில் மாற்றம் செய்யப்படாமல் இருந்திருந்தால், குறித்த விமானத்தில் பணிப்பெண்ணாக மதிகா இராம் செல்ல வேண்டியிருந்திருக்கும், இவர் இந்த விபத்தில் சிக்கியிருப்பார்.அதிர்ஷ்டவசமாக இவர் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here