யுவதியை காப்பாற்ற முயன்று உயிரிழந்த ரிஸ்வானின் இறுதிச்சடங்கு நடைபெற்றது!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலை செய்ய குதித்த யுவதியை காப்பாற்ற முயன்று உயிரிழந்த ஹமீத் ரிஸ்வானின் இறுதிச்சடங்குகள் இன்று இடம்பெற்றது.

லிந்துலை ரத்னகிரி கொலனியில் வசிக்கும் 28 வயதான ஹமீத் ரிஸ்வானை கண்ணீருடன், கிராம மக்கள் வழியனுப்பி வைத்தனர்.

லிந்துலை பொரஸ்டன் ரத்னகிரி கொலனி பொது மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடந்தன.

லிந்துலை ரத்னகிரி விஹாரையின் விகாராதிபதி கொகமுவ தம்மவிமல தேரர் மத அனுஷ்டானங்களை மேற்கொண்டார்.

உயிரிழந்த ரிஸ்வானின் தாய் பௌத்தர். அவரது தந்தை ஒரு முஸ்லீம். ரிஸ்வானின் மனைவி ஒரு கத்தோலிக்க மதத்தவர்.

ரிஸ்வானின் இரண்டு பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பௌத்தத்தை  பின்பற்றுகிறார்கள்.

ரிஸ்வானின் பிரேத பரிசோதனை பரிசோதனை நுவரெலிய ஆதார வைத்தியசாலையில் நேற்று (22) நடைபெற்றது. நீரில் மூழ்கியதால் மரணம் நிகழ்ந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here