இரவில் துணைக்கு வர கேட்ட முன்னணி தமிழ் ஹீரோ: நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

அந்த இடத்தில் நான் வேண்டுமானால் கை வைத்து தேய்த்து விடலாம் எனக் கேட்டார் என முன்னணி தமிழ் நடிகர் மீது பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் ராதிகா ஆப்தே.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகையாக இருந்து வருகிறார்.

படத்திற்கு தேவை என்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயாராக இருப்பவர். மேலும் இவர் தமிழில் கபாலி, சித்திரம் பேசுதடி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இப்படியான நிலையில் இவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஒரு நாள் ஷூட்டிங்கில் கடுமையான முதுகுவலி. சமாளித்துக்கொண்டு ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஓய்வெடுப்பதற்காக லிப்டில் சென்று கொண்டிருந்தேன். அப்போது தன்னுடன் வந்த அந்த முன்னணி ஹீரோ உங்களுக்கு இரவில் எதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் எனக் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் நான் வேண்டுமானால் உங்கள் முதுகில் கை வைத்து தேய்த்து விடவா என வெளிப்படையாக கேட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் அந்த முன்னணி ஹீரோ யார் என கூறவில்லை. தமிழில் ராதிகா ஆப்தே நடித்தது ஒரு சில படங்கள் தான் என்பதால் அந்த ஹீரோ யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here