ஆர்மியை உசுப்பேற்றும் ஓவியா!

பிரபல தொகைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. அவரது வெளிப்படையான நடத்தை, ஓவியா ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு ரசிகர்களை ஈர்த்திருந்தது.

பிக்பாஸ் மூலம் அதிக புகழ் அடைந்தவர் என்றால் அது ஓவியாதான். டைட்டிலில் வெற்றி பெற்ற ஆரவ்வைக் கூட மறந்துவிட்டார்கள். ரசிகர்கள் ஓவியாவை தங்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்கிறார்கள். இதனால் ஓவியாவுக்கு மார்க்கெட் கூடுகிறது. பட வாய்ப்புகளும் விளம்பர வாய்ப்புகளும் குவிகின்றன. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு 90ml என்ற சர்ச்சையான படத்தில் நடித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார். ஆனால், அதையெல்லாம் இக்னோர் செய்துவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என கேரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் ஓவியா போட்டோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மொத்த கூட்டத்தையும் தான் பக்கம் திரும்பியுள்ளார். அரைகுறை ஆடையில் ஸ்லிம் பியூட்டியாக இருக்கும் ஓவியா, கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு, தனது ஆர்மியை உசுப்பேற்றி விட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here