11 மூத்த பொலிஸ் அதிகாரிகளிற்கு உடனடி இடமாற்றம்!

குற்றப்புலனாய்வுத்துறை பணிப்பாளர் உள்ளிட்ட 11 மூத்த பொலிஸ் அதிகாரிகளிற்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் நேற்று (22) அறிவித்தது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன்,  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் இந்த இடமாற்றங்கள் நடந்துள்ளன.

குற்றப்புலனாய்வுத்துறை பணிப்பாளராக கடமையாற்றி வந்த எஸ்எஸ்பி டபிள்யூ.திலகரட்ண இடமாற்றப்பட்டு, புதிய பணிப்பாளராக எஸ்எஸ்பி ஏ.ஆர்.பி.ஜே அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அல்விஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பணிப்பாளராக இதுவரை பணியாற்றி வந்தார்.

ஆறு எஸ்.எஸ்.பி.க்கள், மூன்று எஸ்.பி.க்கள் மற்றும் இரண்டு ஏ.எஸ்.பி தர அதிகாரிகளே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய இடமாற்றங்களின்படி,

சிஐடி பணிப்பாளராக கடமையாற்றிய எஸ்எஸ்பி திலகரத்ன, அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு (எம்.எஸ்.டி) பணிப்பாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்த பொறுப்பில் இருந்த எஸ்.எஸ்.பி டி.வி.பி.அஜித் ஹெசிறி, பொலிஸ் கல்லூர இயக்குனராக இடமாற்றப்பட்டுள்ளார்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த எஸ்.எஸ்.பி டி.ஜி.என்.டபிள்யூ.தல்துவ, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் கல்லூரி பணிப்பாளராக கடமையாற்றி வந்த எஸ்.எஸ்.பி எச்.சி.ஏ.புஷ்பகுமாரா மேல் மாகாண புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.எஸ்.பி கே.ஜி.எல்.கீதால், நுகேகோடா பிரிவில் இருந்து சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.யு) பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.யு) பணிப்பாளராக கடமையாற்றிய எஸ்பி சி.டி.குருசிங்க விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here