நாடு திரும்பிய நடிகர் பிரித்விராஜ் தனிமைப்படுத்தப்பட்டார்!

படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்று கேரளா திரும்பிய நடிகர் பிரித்விராஜ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பிரித்விராஜ், ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். அமலாபால், அபர்ணா முரளி, வினித் சீனிவாசன் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பிளஸ்சி இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்புக்காக பிரித்விராஜ் உள்பட படக்குழுவை சேர்ந்த 58 பேர் கொரோனா ஊரடங்குக்கு முன்பே ஜோர்டான் சென்று விட்டனர். அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவன பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது ஊரடங்கை அறிவித்து விமான போக்குவரத்தை நிறுத்தியதால் அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை.

பாலைவன பகுதியில் தங்கி இருப்பதாகவும், நல்ல உணவு கிடைக்கவில்லை என்றும் பிரித்விராஜ் உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார். அவரை மீட்டு வரும்படி கேரள அரசுக்கு மலையாள திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு முடியாது என்று கைவிரித்து விட்டது.

இந்த நிலையில் ஜோர்டானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானத்தை அனுப்பியது. இந்த விமானத்தில் பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் 58 பேரும் டெல்லி திரும்பி, அங்கிருந்து கொச்சி வந்து சேர்ந்தார்கள். பிரித்விராஜ் உள்ளிட்ட 58 பேரையும் கேரள சுகாதாரத் துறை 14 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here