கொரோனா விடுதியில் நீச்சலுடையில் வந்த தாதிக்கு பெருகும் வாய்ப்பு!

நீச்சல் உடை அணிந்து கொரோனா விடுதியில் பணிபுரிந்த தாதிக்கு மொடலாகும் வாய்ப்பு குவிந்து வருகிறது.

ரஷ்யாவில் கொரோனா வைரசால் 3 இலட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கபட்டு உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர் இழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து 193 கி.மீ தொலைவில் துலா என்ற நகரத்தில் உள்ள வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் விடுதியில் பணியாற்றிய இளம் தாதியொருவரே நீச்சலுடையில் தோன்றினார்.

இப்போது ரஷ்யாவில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதன் காரணமாக அவர் பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை தாதிய நாடியா (23) அணிந்துள்ளார். ஆனால் ரஷ்யா முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. சுகாதாரம் மற்றும் தோற்றத்துக்கு இணங்க தாதிகள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.

அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்தது.அவரது சக தாதிலியர்களூம் மருத்துவர்களும் நடியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

உள்ளாடை தெரியும் விதத்தில் பாதுகாப்பு உடை அணிந்து பணி செய்ததால் பரபரப்பை ஏற்படுத்திய நடியாவிற்கு இந்த சர்ச்சையிலும் ஒரு நன்மையும் ஏற்பட்டுள்ளது. தற்போது பிரபல உள்ளாடை நிறுவனமான மிஸ் எக்ஸ் லிங்கரி என்ற நிறுனத்தின் தலைவரான அனஸ்தேசியா யகுஷேவா செவிலியர் நடியா எங்கள் நிறுவன மொடலாக வேண்டும் என்று விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அவருக்காக பல புதிய தயாரிப்புகளை உருவாக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ள அவர், எதிர் காலத்தில் வருடாந்திர ஒப்பந்தம் ஒன்றையும் அவருடன் செய்துகொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here