கஷோகி கொலையாளிகளை மன்னிக்க யாருக்கும் உரிமையில்லை!

என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விடுகிறேன் என்று ஜமால் கஷோகியின் மகன் தெரிவித்ததற்கு ஜமாலின் தோழி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜமால் கஷோகி மகன் சாலா கஷோகிஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜமால் கஷோகியின் மகன்களாகிய நாங்கள் எங்கள் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிடுகிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஜமாலின் தோழியான ஹடிஸ் சென்ஜின் கூறும்போது, “ஜமாலைக் கொன்றவர்களை மன்னிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஜமாலின் கொலைக்கு நீதி கிடைக்கும் வரை நானும் மற்றவர்களும் இந்தப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை. அவரைக் கொல்ல கொலையாளிகள் சவுதியிலிருந்து வந்தார்கள். நாங்கள் ஜமாலைக் கொன்றவர்களையும், அவரைக் கொல்ல ஆணையிட்டவர்களையும் மன்னிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here