மூச்சு திணறலாலேயே 3 பெண்களும் உயிரிழந்தனர்: பிரேத பரிசோதனை அறிக்கை!

பணம் கொடையளிக்கும் நிகழ்வில் உயிரிழந்த 3 பெண்களும் மூச்சுத்திணறலாலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் பணக்கொடையளித்த சம்பவத்தில், அதை பெற முண்டியடித்தவர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரழந்தவர்களின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெற்றது. இது தொடர்பான அறிக்கை, கொழும்பு மேலதிக நீதிவான்காஞ்சனா நெரஞ்சல டி சில்வா முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது. உயிரிழந்தவர்கள் மூச்சுத்திணறலாலேயே உயரிழந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டது.

இதில் கொழும்பு 10 – மாளிகாவத்தை லக்சித்த உயன தொடர்மாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த உமா அகிலா (62), ஜும்மா மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தையைச் சேர்ந்த பெளசியா நிஸா (59), லக்சித்த செவன தொடர்மாடி குடியிருப்பை சேர்ந்த பரீனா முஸம்மில் (68) ஆகிய மூன்று பெண்களே உயிரிழந்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிவான், அவற்றை மாளிகாவத்த முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, பணம் கொடையளிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்த வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகரான தெஹிவளை பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் சரூக், அவரது மகன் மொஹம்மட் இம்தியாஸ், மொஹம்மட் நசீர், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் ரிஸ்வான், மாகும்புர பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் யோகேஸ்வரன், நுவரெலியாவைச் சேர்ந்த முபாரக் சங்தூஸ், லிந்துலையைச் சேர்ந்த மருதமுத்து சிவபாலம், மட்டக்குளியைச் சேர்ந்த இமார் பாரூக் அஹமட் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

இதேவேளை, பகிர்ந்தளிக்க கொண்டு வரப்பட்ட 1000 ரூபா நோட்டுக்கள் 500 பொலிசாரின் பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here