3 நாட்கள் அமெரிக்க தேசியக்கொடி அரைகம்பத்தில்… பிரேஸிலில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!

உலக சுகாதார நிறுவனம் பல வாரங்களின் முன்னரே எச்சரித்த அனர்த்தம் தற்போது பிரேஸிலில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றும், மரணமும் மிக அதிகமாகி வரும் நாடாக பிரேஸில் மாறி வருகிறது.

நேற்று மட்டும் பிரேஸிலில் 1,188 உயிரிழப்புக்கள் பதிவாகியது. 17,564 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 310,921 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். உலகில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் 3வது இடத்திற்கு சடுதியாக உயர்ந்துள்ளது பிரேஸில்.

அமெரிக்கா, ரஷ்ய முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

இதேவேளை, மொத்த உயிரிழப்பு 20,047 ஆக உயர்ந்துள்ளது.

பிரேஸில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதும், இது சரியான எண்ணிக்கையல்ல என தெரிவிக்கப்படுகிறது. பிரேஸிலில் முறையான பரிசோதனை வசதிகள் இல்லாததால், அடையாளம் காணப்படாத நோயாளர்கள் பெருமளவில் உள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமெரிக்காவில் நேற்று 1,418 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 96,354 ஆக உயர்ந்தது. புதிதாக 28,179 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 1,620,902 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

அமெரிக்காவில் அடுத்த 3 நாட்களிற்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவுள்ளது. கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் நினைவாக, தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடும் உத்தரவை ஜனாதிபதி ட்ரம்ப் இட்டுள்ளார். இது குறித்து அவர் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மெக்சிக்கோவில் நேற்று 424 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 6,090 ஆக உயர்ந்தது. புதிதாக 2,248 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 56,594 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 338 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 36,042 ஆக உயர்ந்தது. புதிதாக 2,615 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 250,908 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று 127 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 3,099 ஆக உயர்ந்தது. புதிதாக 8,849 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 317,554 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

இத்தாலியில் நேற்று 156 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 32,486 ஆக உயர்ந்தது. புதிதாக 642 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 228,006 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

இந்தியாவில் நேற்று 150 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 3,584 ஆக உயர்ந்தது. புதிதாக 6,198 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 118,226 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

கனடாவில் நேற்று 121 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 6,152 ஆக உயர்ந்தது. புதிதாக 6,152 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 81,324 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

நேற்று உலகம் முழுவதும் 4,934 பேர் உயிரிழந்தனர். 107,085 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here