இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,12,359 ஆக உயர்வு

புதிதாக 5,609 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்துள்ளது. இதில் 40 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

கொரோனா தொடர்ந்து 2 வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்தியாவில் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், 24 மணி நேரத்துக்குள் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நாளில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 5,611 ஆக இருந்தது.

அந்த வகையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750-ல் இருந்து 1,12,359 ஆக உயர்ந்துள்ளது. இதில் சுமார் 40 சதவீதம் பேர், அதாவது 45,300 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக இந்த வைரஸ் தொற்றால் 132 பேர் பலியாகி உள்ளனர். இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 65 பேரும், குஜராத்தில் 30 பேரும் 24 மணி நேரத்துக்குள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,435 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 63,624 ஆக உள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்த மாநிலமாக மராட்டியம் இருந்து வருகிறது. அங்கு 1,390 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. குஜராத்தில் 749 பேரும், மத்திய பிரதேசத்தில் 267 பேரும், மேற்கு வங்காளத்தில் 253 பேரும், டெல்லியில் 176 பேரும், ராஜஸ்தானில் 147 பேரும், உத்தரபிரதேசத்தில் 127 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மற்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 100-க்கு கீழே உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் (அடைப்புக்குறிக்குள்) எண்ணிக்கை வருமாறு:-

மராட்டியம்-39,297 (10,318), தமிழ்நாடு-13,967 (6,282), குஜராத்-12,537 (5,219), டெல்லி-11,088 (5,567), ராஜஸ்தான்-6,015 (3,031), மத்திய பிரதேசம்-5,735 (2,733), உத்தரபிரதேசம்-5,175 (3,099), மேற்கு வங்காளம்-3,103 (1,163), ஆந்திரா-2,602 (1,680), பஞ்சாப்-2,005 (1,794), பீகார்-1,674 (593), தெலுங்கானா-1,661 (1,013), கர்நாடகா-1,462 (571), ஜம்மு-காஷ்மீர்-1,390 (694), ஒடிசா-1,052 (393), அரியானா-993 (670), கேரளா-666 (510), ஜார்கண்ட்-231 (129), சண்டிகர்-202 (165), திரிபுரா-173 (133), அசாம்-170 (48), உத்தரகாண்ட்-122 (54), சத்தீஷ்கார்-115 (59), இமாசலபிரதேசம்-110 (55), லடாக்-44 (43), அந்தமான் நிகோபர் தீவு-33 (33), கோவா-50 (7), மணிப்பூர்-25 (2), மேகாலயா-14 (12), புதுச்சேரி-18 (13), மிசோரம்-1 (1), தாதர் நாகர் ஹாவேலி-1, அருணாசலபிரதேசம்-1.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here