வில்லன் நடிகரை பற்றி வில்லங்க தகவல்களை வெளியிடும் மனைவி!

ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக்கை, மனைவி ஆலியா விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

நவாசுதீன் சித்திக் மற்றும் ஆலியா திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன, இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர். இந்தநிலையில், ஆலியா விவாகரத்து மற்றும் பராமரிப்பு கோரியுள்ளார். ஆலியாவின் வழக்கறிஞர் நவாசுதீன் சித்திக்கிற்கு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் வழியாக மே 7 அன்று சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பியுள்ளார். ஆனால் சித்திக்கிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இந்த நிலையில் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா டுவிட்டரில் தன்னை இணைத்து கொண்டு சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளைவெளிப்படுத்தியுள்ளார்.

தனது சொந்த தவறுகளை மறைக்க நவாசுதீனும் அவரது உறவினர்களும் எனது நற்பெயரைத் கெடுக்க முயற்சிக்கின்றனர். முழு விஷயத்திற்கும் பின்னால் உள்ள உண்மை என்ன என்பதை உலகுக்குக் காண்பிப்பேன். எனது அமைதி எனது பலவீனம் அல்ல. டுவிட்டரில் என்னைப் பின்தொடரவும், அதிர்ச்சியூட்டும் சில உண்மைகளை நான் வெளிப்படுத்துவேன் என கூறி உள்ளார்.

என்னை குறித்து தவறான தகவல் பரவுவதால் என்னைப் பற்றிய உண்மையை டுவிட்டரில் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும் துஷ்பிரயோகம் செய்வதாலும் உண்மையை மறைக்க முடியாது.

வேறு சில மனிதர்களுடனான தொடர்பு என்பது பொய்யானது தவிர வேறொன்றுமில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

நான் எந்த மனிதனுடனும் எந்த உறவும் வைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்; அத்தகைய கூற்றுக்களை வழங்கும் எந்த ஊடக தகவலும் முற்றிலும் தவறானவை. கவனத்தை திசை திருப்புவதற்காக இதுபோன்ற அபத்தமான கூற்றுக்களைச் செய்ய ஊடகங்களின் சில பிரிவுகள் எனது புகைப்படத்தை கையாண்டு உள்ளன என கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here