வீட்டின் மேல் மரம் விழுந்தது!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று வீசிய கடும்காற்றினால் மரம் ஒன்று சாய்ந்து வீட்டின் மேல் விழுந்துள்ளது.

வீட்டில் சிறுகுழந்தை உட்பட குடும்பத்தினர் வசித்த நிலையில் அவர்களுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறாதநிலையில் வீட்டின் ஒரு பகுதி மாத்திரம் சேதமடைந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபைக்கு தெரியப்படுத்தியநிலையில் உடனடியாக குறித்த பகுதிக்கு சென்ற நகரசபையின் உப தவிசாளர் சுந்தரம் குமாரசாமி நகரசபை இயந்திரங்களை வரவழைத்து குறித்த மரத்தினை அகற்றியிருந்தமை குறிப்பிடதக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here