ராணாவிற்கு நிச்சயதார்த்தம்!

பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் ராணா, சமீபத்தில் தனது காதலி இவர் தான் என மஹீகா பஜாஜ் என்பவரை அறிமுகம் செய்தார்.

இவர் ஒரு இண்டிரீயர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் சம்மதம் சொல்லிவிட்டனர்.

இதையடுத்து திருமண செய்து வைக்க பெற்றோர்கள் முடிவெடுத்து இன்று (21) எளிய முறையில் நிச்சயதார்த்தமும் நடத்தி உள்ளனர். கொரோனா ஊரடங்கால் நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்திருந்தனர். டிசம்பரில் திருமணம் நடக்கலாம் என கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தம் நடந்த தகவலை இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டு இதோ அதிகாரப்பூர்வமாக என பதிவிட்டுள்ளார் ராணா. பலரும் இவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here