மே 18 உலகத்தமிழர்களின் துக்கநாள்: இசையமைப்பாளர் டி.இமான்!

மே 18, உலகம் முழுக்கவுள்ள தமிழர்களின் துக்க நாளாகும் என இசையமைப்பாளர் டி. இமான் கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இறுதிப் போர் முடிவடைந்த 11வது ஆண்டு நினைவுநாள் நேற்றாகும். போரின் இறுதியில் வகைதொகையின்றி மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இது உலகத்தமிழ் மக்கள் மத்தியில் அழியாத வடுவாக இருக்கிறது.

நேற்று உலகமெங்குமுள்ள தமிழர்கள் அந்த கறுப்பு நாளை நினைவுகொண்டார்கள். பிரபல இசையமைப்பாளர் டி.இமானும் இது குறித்து தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

மே 18, உலகம் முழுக்கவுள்ள தமிழர்களின் துக்க நாளாகும். தங்களுடைய வாழ்வைத் தியாகம் செய்த வீரத்தமிழர்களுக்கு வீர வணக்கம். வாழ்க தமிழ், வாழ்க மனிதம் என்று எழுதியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here