பாசத்தில் எல்லோரையும் மிஞ்சிய தர்சானன்: அறிவுரை சொன்ன அண்ணன் ஆனோல்ட்!

யாழ் மாநகரசபையின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்றது. இதன்போது, சபை வழக்கத்திற்கு மாறாக உறவுகொண்டாடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் பரமலிங்கம் தர்சானனிற்கு, முதல்வர் ஆனோல்ட்  அறிவுரை வழங்கியுள்ளார்.

உரையாற்றி ஆரம்பித்த தர்சானன், முதல்வர் ஆனோல்ட்டை பார்த்து- அண்ணன் ஆனோல்ட் என விழித்துப் பேசினார்.

இதனையடுத்து குறிப்பிட்ட முதல்வர் ஆர்னோட்- அண்ணன் தம்பி பாசத்தை இங்கு சபை அமர்வுகளில் காட்டத் தேவையில்லை என்றும் சபையின் மாண்பினைப் பேணும்வகையில் முதல்வரை கௌரவ முதல்வர் என்றும் சபை உறுப்பினர்களை கௌரவ உறுப்பினர்கள் என்றும் அழைக்குமாறும் தர்சானந்திற்கு அறிவுரை வழங்கினார்.

இதேவேளை, நேற்றைய அமர்விற்கு கழுத்தில் சிவப்பு மஞ்சள் கொடியை போட்டபடி தர்சானன் சென்றது சமூக வலைத்தளங்களில் அதிகம் கிண்டலடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here