குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட முன்னாள் கனவுக்கன்னி!

90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சங்கவி. அஜித்தின் அமராவதி படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சங்கவி, விஜய், அஜித், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு மென்பொறியாளர் வெங்கடேஷ் என்பவரை சங்கவி திருமணம் செய்து கொண்டார். 42 வயதாகும் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை அவர் வெளியிடாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் அன்னையர் தினத்தையொட்டி குழந்தையுடன், தான் இருக்கும் புகைப்படத்தை சங்கவி வெளியிட்டுள்ளார். குழந்தை அப்படியே சங்கவி போல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here