இந்தவார ராசி பலன்கள் (17.5.2020- 23.5.2020)

கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கி நெருக்கம் கூடும். தந்தையின் உடல் நலனில் சிறு பிரச்னை ஏற்பட்டாலும் ஓரிரு நாட்களில் முழுமையாகச் சரியாகிவிடும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. சகோதரர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பதுடன் தேவையான உதவிகளும் செய்வார்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும். தொழில் ரீதியாக ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு குடியேறும் வாய்ப்பு உண்டாகும். பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

சகோதரர்களிடமிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். பெண்களுக்குப் பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு தொடரும். அரசாங்க வகை செயல்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். தொழிலில் பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள்.

பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

தன்னம்பிக்கையுடன் பொதுநல விஷயத்தில் ஈடுபட்டுப் பாராட்டைப் பெறுவீர்கள். பெண்களின் திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சகஊழியர்களால் நன்மை உண்டாகும். தாய்வழி உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வரும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் நீங்கும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பழைய கடன்களில் ஒரு பகுதியைத் திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்க வேண்டாம். கலைஞர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயாரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

பரிகாரம் : அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

பணவசதி போதுமானதாக இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை கேட்பது நல்லது. பிள்ளைகளால் ஏற்பட்டிருந்த சில பிரச்னைகள் முடிவுக்கு வரும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் மோசம் இல்லை. கலைஞர்கள் முயற்சியை அதிகப்படுத்துவதன் மூலம் அரிய வாய்ப்புகளைப் பெறலாம். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை பெருமிதத்துடன் ஏற்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

பரிகாரம் : சிவன் வழிபாடு சிரமத்தை குறைக்கும்.

முன்னேற்றப் பாதையில் அடிஎடுத்து வைப்பீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக நடப்பதற்கு கூடுதல் உழைப்பு தேவை. கலைத் துறையினர் அதிகம் சிரமப்படாமல் நன்மையடைவார்கள். சிறப்பாக பணிபுரிந்து மேலதிகாரியிடம் பாராட்டு, பரிசைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். பெண்களுக்கு அரசாங்கத்தின் மூலம் உதவி கிடைக்கும். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள். பழைய கடனில் சிறு பகுதியை அடைப்பீர்கள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். நீண்ட கால பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

பரிகாரம் : பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.

வெளிநாட்டிலிருந்து நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பணவரவில் பெரிதாய் எந்தவித மாறுதலும் வந்துவிடாது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் மேற்கொண்ட முயற்சிகள் அனுகூலமாக முடியும். தெய்வ வழிபாடு மனஅமைதி தரும்.

சந்திராஷ்டமம் : 19.5.2020 இரவு 9:27 – 22.5.2020 காலை 8.34 மணி
பரிகாரம் : பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.

எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு திருப்திகரமாகும். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஆகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அலுவலக பணியாளர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். பெண்கள் அடுத்தவர் கஷ்டங்களை புரிந்து கொண்டு உதவி செய்து நற்பெயரும், பாராட்டையும் பெறுவர். உடன்பிறந்தவர்களுக்கு வேலை கிடைத்து சந்தோஷம் அடைவீர்கள்.

பரிகாரம் : மகாலட்சுமி வழிபாடு சகல நன்மை தரும்.

மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். வாழ்கை துணைவர் அன்றாட வேலைகளில் ஆதரவாக இருப்பார். அலுவலக விஷயங்களில் உங்களுக்கு சகஊழியர்களின் உதவி கிடைக்கும். சகோதர, சகோதரிகளிடம் உறவு நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசினால் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம். பெண்கள் தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டாம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். புதுமணத் தம்பதியினருக்கு விருந்து உபசாரம் செய்து மகிழ்வீர்கள். பகைபாராட்டிய நண்பர்கள் இணைந்து கொள்வார்கள்.

பரிகாரம் : பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.

குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன், மனைவியிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும், மகிழ்ச்சியும் கூடும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். பெண்களுக்கு சேமிப்பு உயரும். படிப்பு முடிந்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைப்பதில் சிறு அளவில் தாமதம் ஏற்படும். சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்பாக உழைத்தால் அனைத்து விதமான முயற்சிகளிலும் வெற்றி பெறலாம். மின்னணு சாதனங்கள் சார்ந்த வியாபாரம் செய்பவர்கள் விற்பனையில் முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் சிலர் வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல புத்தகங்களை படிப்பர்.

பரிகாரம் : சரபேஸ்வரர் வழிபாடு கஷ்டத்தை போக்கும்.

புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். கணவன், மனைவி இடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு பின் மறையும். பணியிடத்தில் எதிர்கொள்ளும் கசப்பான சூழல்களை எண்ணி வருத்தப்பட வேண்டாம். அது நிரந்தரமானது அல்ல. இன்பச் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற எண்ணம் பிறந்தாலும் அது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் தரும் வாய்ப்புகள் அமையும். வியாபாரம் தொடர்பான வழக்குகள் தள்ளிப்போகாலம். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

பரிகாரம் : குருவாயூரப்பன் வழிபாடு நிம்மதி தரும்.

வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு அது பற்றிய தகவல் உறுதியாகும். குடும்பத் தலைவருக்குச் செலவுகள் கூடும். பல வருடமாய்க் கனவு கண்ட புது வீடு கட்ட வாய்ப்புக் கிடைக்கும். நிதிநிலை தொடர்பான எந்த விஷயத்திலும் வருத்தப்பட வேண்டியதில்லை. கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். பெண்கள் மனதுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வர். கலைஞர்கள் புதுவித வாய்ப்புக்காக சற்றுப் பொறுமையாக இருப்பது நல்லது. நண்பர்களிடம் கடந்த கால நினைவுகளை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள்.

பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

முன்னேற்றப் பாதையில் அடிஎடுத்து வைப்பீர்கள். வியாபாரிகளுக்குப் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்கள் மூலம் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெண்கள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறைகூற வேண்டாம். நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். அலுவலகப் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். கலைஞர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இளைஞர்கள் சமூகத்திற்கு பயன்தரும் செயல்களில் ஈடுபடுவர். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

பரிகாரம் : முருகன் வழிபாடு நம்பிக்கை அளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here