ஆஹா ஓஹோ என நியூசிலாந்து கொண்டாடும் அறிமுக வீரர்!

நியூஸிலாந்து அணி வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இடது கை துடுப்பாட்ட வீரரான டெவன் பிலிப் கான்வே என்ற புதிய இடது கை வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். இவரை புதிய துடுப்பாட்ட மாஸ்ட்ரோ என்றும் புதிய ஸ்டார் என்றும் நியூஸி. கிரிக்கெட் வர்ணிக்கிறது.

இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் நியூஸிலாந்தின் உள்நாட்டு கிரிக்கெட்டில் 3 வடிவங்களிலும் ரொப் ஸ்கோரர் டெவன் பிலிப் கான்வேதான். இவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்தவர். நியூஸிலாந்து அணிக்கு ஆட 3 ஆண்டுகள் இவர் நியூஸிலாந்தில் வசிக்க வேண்டும்.

வரும் ஓகஸ்ட் மாதம் இவர் நியூசிலாந்து அணிக்குஆட தகுதி பெறுகிறார். 28 வயதாகும் கான்வே 103 முதல் தரப் போட்டிகளில் 6674 ரன்களை 47 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

17 சதங்கள், 30 அரைசதங்கள், அதிகபட்ச ஸ்கோர் கிட்டத்தட்ட பந்துக்கு ஒரு ரன் விகிதத்தில் எடுத்த 327 நொட் அவுட். லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் 81 போட்டிகளில் 3,104 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 45. ஸ்ட்ரைக் ரேட் 86. எட்டு சதங்கள் 18 அரைசதங்கள். அதிகபட்ச ஸ்கோர் 152.

70 டி20 போட்டிகளில் 2,221 ரன்கள், 39.66 என்ற சராசரி. 124.84 என்ற ஆரோக்கியமான ஸ்ட்ரைக் ரேட். 2 சதங்கள் 14 அரைசதங்கள். இதில் சுமார் 1,000த்துக்கும் கூடுதலான ரன்களை பவுண்டரிகள் சிக்சர்களிலேயே விளாசியுள்ளார். இந்த 2,221 ரன்களில் 237 பவுண்டரிகள் 52 சிக்சர்கள் அடங்கும்.

வீரர்கள் ஒப்பந்தத்தில் இவரைச் சேர்த்தது பற்றி கெவின் லார்சன் கூறும்போது, “ 3 வடிவங்களிலும் இவரது போர்ம் அப்படி. இவரைப் புறக்கணிப்பது கடினம். நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் கான்வே ஒரு பெரிய நிகழ்வாக இருகும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here