முஷ்பிகுர் ரஹிம் மட்டை ஏலம்: சினிமா பாணியில் தொகையை ‘ஏற்றிவிட்ட’ நபர்கள் – கடைசியில் அப்ரிடி வாங்கினார்

கொரோனா வைரஸ் நிவாரணத்துக்காகவும் வளர்ச்சி அறக்கட்டளைக்காகவும் நிதி திரட்ட பங்ளாதேஷ் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் தனது துடுப்பு மட்டையை ஒன்லைன் ஏலத்துக்கு விட்டார்.

2013 இல் இலங்கைக்கு எதிராக பங்களாதேஷின் முதல் டெஸ்ட் இரட்டைச் சதம் எடுத்த துடுப்பு மட்டையை முஷ்பிகுர் ஒன்லைனில் ஏலம் விட்டார்.

ஆனால் சினிமாக்களில் வருவது போல் ஒரு குரூப் உள்ளே நுழைந்து மட்டையின் விலையை தாறுமாறாக ஏற்றி விட, அது 50,000 டொலர்கள் வரை சென்றது. இதனையடுத்து ஏலத்தை நடத்திய ஏற்பாட்டாளர்கள் ஏலத்தையே நிறுத்தி விட்டனர்.

இதனையடுத்து முஷ்பிகுரை தொடர்பு கொண்டு அவரது அந்தப் துடுப்பு மட்டையை 20,000 டொலர்களுக்கு பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரீடி வாங்கியுள்ளார்.

“அஃப்ரீடி என்னைத் தொடர்பு கொண்டார். நான் அவருக்கு ஒன்லைன் ஏலத்தின் இணைப்பை அனுப்பினேன். மே 13ம் திகதி அவர் எனக்கு கடிதம் அனுப்பி 20,000 டொலர்கள் தருகிறேன் என்றார். இதே தொகைக்கு வாங்கியும் விட்டார். உண்மையில் நான் சிறப்பானவனாக உணர்கிறேன்.” என்று முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்தார்.

ஷாகித் அப்ரீடி கூறும்போது, “கடினமான காலங்களில் வாழ்கிறோம். ஏழைகளுக்கு உதவுவதற்கான நேரம் இது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here