ஷங்கரின் உதவி இயக்குனர் விபத்தில் பலி!

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட் பக்கார் என்கிற அருண் பிரசாத். இவர் ஷங்கரின் ஐ உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 4ஜி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், இயக்குனர் அருண் பிரசாத் இன்று மேட்டுப்பாளையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here