தாம்பத்தியத்தின் போது விளக்கை அணைக்க பெண்கள் விரும்புவது ஏன்?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 30

சி.மனோகரன் (26)
முத்தையன்கட்டு

தாம்பத்தியத்தின்போது விளக்குகளை அணைக்க வேண்டும் என்று என் மனைவி வற்புறுத்துகிறார். ஆனால், எனக்கோ விளக்குகள் எரிய வேண்டும். என் மனைவி மிகவும் பிடிவாதமாக இருக்கிறாரா?. ஏதேனும் பிரச்சனையா?

டாக்டர் ஞானப்பழம்: இல்லை. உங்களிற்கு விளக்கு எரிய வேண்டுமென விருப்பம். அவருக்கு எரியக் கூடாதென விருப்பம். அவ்வளவுதான். விளக்கு எரிய வேண்டுமென விரும்பும் உங்களிற்கோ, விளக்கு எரியக் கூடாதென விரும்பும் மனைவிக்கோ எந்த பிரச்சனையும் கிடையாது.

இது ஒரு இயல்பு. அவ்வளவுதான்.

பெண்களின் இயல்பே எப்போதும் தடுப்பதும் தற்காப்பதும்தான். இயற்கையாகவே பெண்களுக்குக் கூச்ச உணர்வு அதிகம். அதிலும், அடுத்தவர் முன்னிலையில், அது கணவனாகவே இருந்தாலும் ஆடை கலைவதை அவர்கள் உள்ளுணர்வு விரும்புவது இல்லை. எனவே, வெளிச்சம் வேண்டாம் என்கிறார். அவர் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். அவரை உடனே செய்தாக வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். இந்தத் தடையில் இருந்து வெளிவர அவருக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். கொஞ்ச காலத்திலேயே அவர் இதில் இருந்து விடுபடுவார்.

எறும்பு ஊர கற் குழியும் என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். அவசரப்படாதீர்கள்.

பெண்- பெயர் குறிப்பிடவில்லை (21)
கொடிகாமம்

எனக்கு திருமணமாகி ஒரு வாரம். பேச்சு திருமணம். திருமணமான அன்று முதலிரவில் நாம் உறவில் ஈடுபடவில்லை. உறவில் ஈடுபட முயன்றோம். ஆனால், கணவனால் முடியவில்லை. ஆனால், மறுநாள் உறவில் ஈடுபட்டோம். முதல்நாள் அவரால் உறவில் ஈடுபட முடியாதது எனக்கு உறுத்தலாக உள்ளது. அவருக்கு ஏதேனும் பிரச்சனையிருக்குமா?

டாக்டர் ஞானப்பழம்: தங்கை உங்கள் நீண்ட கடிதம் படித்ததில் நீங்கள் தேவையற்ற பல குழப்பங்களில் சிக்கியுள்ளது புரிகிறது. தேவையற்ற குழப்பம் தேவையில்லை.

முதல்நாள் ஒருவரை பார்க்கிறீர்கள். அவர் பேசவில்லை. மறுநாள் பார்க்கிறீர்கள் பேசுகிறார். இன்னொரு நாள் பேசவில்லை. இதற்காக அவர் வாய் பேச முடியாதவர் என்று அர்த்தமாகாது. அவர் பேசாததற்கு ஏதாவது புறக்காரணம் இருக்கலாம்.

அதுபோலத்தான் உங்கள் விவகாரமும். முதல் நாள் ஈடுபட முடியவில்லை, ஆனால் அடுத்த நாள் நன்றாக ஈடுபட முடிந்தது என்றால் அவரிடம் எந்தப் பிரச்னையுமே இல்லை.

திருமணத்துக்காக அதிகாலையில் கண் விழித்தது, நீண்ட நேரம் திருமணச் சடங்குகளில் ஈடுபட்டது, உறவினர்கள், நண்பர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டது என்று திருமணத்தின் பல நிகழ்வுகள் அவருக்கு அசதியைக் கொடுத்திருக்கலாம். இதனால், உடல் சோர்வு ஏற்பட்டிருக்கலாம். இந்த சூழலில் அவருக்கு விருப்பம் இருந்தும்கூட அவரது இனப்பெருக்க உறுப்புக்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அடுத்த நாள் சோர்வு நீங்கியதும், அவரால் இயல்பாகத் தாம்பத்தியத்தில் ஈடுபட முடிந்திருக்கிறது அவ்வளவே.

இது உங்கள் கணவரின் நிலை மட்டுமல்ல, பெரும்பாலான ஜோடிகளின் நிலை இதுதான். உங்களிற்கு ஒன்று தெரியுமா?, திருமணத்திலன்று- முதலிரவில் முழுமையான இன்பம் காண்பவர்கள் வெகு அரிதானவர்களே.

இல்லறமும் கிரிக்கெட் ஆட்டம் போலத்தான். களத்தில் இறங்கியதும் விளாச முடியாது. மெதுமெதுவாகத்தான் அடித்தாட முடியும். சந்தேகத்தை தவிர்த்து ஜமாயுங்கள்.

எம்.முஸம்மில் (23)
ஓட்டமாவடி

எந்த பொசிஷனில் உடலுறவு கொண்டால், குழந்தைப்பேறுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்?

டாக்டர் ஞானப்பழம்: பெண் கீழே இருந்து, விந்தணு எளிதில் உள்ளே செல்லும் பொசிஷன் பரிந்துரைக்கப்படுகிறது. படுக்கையில் பெண்ணின் இடுப்புப் பகுதியில் கூடுதலாக ஒரு தலையணையை வைத்து தாம்பத்திய உறவுகொள்ளும்போது, விந்தணு பெண்ணின் இனப்பெருக்க உறுப்புக்குள் பாயும். உறவுகொண்டு குறைந்தது அரை மணி நேரத்துக்கு இந்த நிலையிலேயே பெண் இருக்க வேண்டும்.

கடந்த பாகத்தை படிக்க: மச்சாளை திருமணம் செய்யலாமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here