மாதம் பத்து இலட்சம் கேட்கும் ஷமி மனைவி!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமிக்கும், கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகி ஹசின் ஜஹானுக்கும் 2014-ல் திருமணமானது.

இந்த நிலையில் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் கொல்கத்தா போலீ ஸில் 2 மாதங்களுக்கு முன்பு புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், இங்கிலாந்தை சேர்ந்த முகமது பாயின் வற்புறுத்தலின் பேரில் கொல்கத்தாவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அலிஸ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது ஷமி பணம் பெற்றுக் கொண்டதாக கூறியிருந்தார்.

மேலும் ஷமி தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும், முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் ஹசின் ஜஹான் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் முகமது ஷமி மீது கொல்கத்தாவிலுள்ள அலிபோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் ஜஹான். அதில் அவர் கூறியிருப்பதாவது: முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இந்த நிலையில் அவர் இந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். வழக்கு முடியும் வரை எனக்கும் எனது மகளுக்கும் பராமரிப்புச் செலவுக்காக ரூ.10 லட்சத்தைத் தரவேண்டும். மேலும் ஜாதவ்பூரிலுள்ள எங்களது அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து என்னை அவர் விரட்டக்கூடாது. இதற்கு தகுந்த பாதுகாப்பை நீதிமன்றம் வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here