இந்தவார ராசிபலன்கள் (10.5.2020- 16.5.2020)

எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். அலுவலக விஷயங்களில் எதையும் எதிர்த்து நிற்பதை விடுத்து அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி வரும். வியாபாரிகள் சொத்துக்களை வாங்குவதிலும், விற்பதிலும் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். தந்தைக்கு சிறு அளவில் கண் பரிசோதனை செய்ய வேண்டி வரும். சகோதர, சகோதரிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். புதிய நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். எதிர்பாராத வரவால் குடும்பத் தேவை பூர்த்தியாகும்.

பரிகாரம் : முருகன் வழிபாடு குறை தீர்க்கும்.

எதிர்வரும் சவால்களை புன்னகையுடன் எதிர்கொள்வீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் நிதானமாகப் பேசுவது நல்லது. புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணத்தை ஒத்திப்போட வேண்டி வரும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்தபடி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்கள் திட்டமிட்ட செயல்களை முடிப்பதில் சிறு அளவில் தாமதம் ஏற்படும். மாணவர்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 10.5.2020 காலை 8:40 – 12.5.2020 பகல் 2:39 மணி
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு நிம்மதி தரும்.

எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். குடும்பத்தில் சந்தோஷமும், மன நிம்மதியும் அதிகரிக்கும். சகஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ஒரு முறைக்கு பலமுறை ஆராய்வது நன்மை தரும். திட்டமிட்ட செயல்களில் தாமதம் ஏற்படலாம். சகோதரர்கள் வழியில் ஏதேனும் பிரச்னை வரலாம். பெண்களுக்கு மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் கொள்வர்.

சந்திராஷ்டமம் : 12.5.2020 பகல் 2:40 – 14.5.2020 இரவு 11.05 மணி
பரிகாரம் : துர்கை வழிபாடு துயரைத் துடைக்கும்.

விடாமுயற்சியுன் செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள். உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சற்றுத் தள்ளிப் போகலாம். அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வ சொத்து சம்மந்தப்பட்ட வகையில் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு எதிர்பார்த்த செயல்கள் நிறைவேறுவதில் சிறிய தடைகள் ஏற்படும். மாணவர்கள் இணையதளம் மூலமாக புதிய விஷயங்களை கற்றுக் கொள்வர்.

சந்திராஷ்டமம் : 14.5.2020 இரவு 11:06 – 16.5.2020 நாள் முழுவதும்
பரிகாரம் : அனுமன் வழிபாடு துன்பம் போக்கும்.

முன்னேற்றப் பாதையில் அடிஎடுத்து வைப்பீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக நடப்பதற்கு கூடுதல் உழைப்பு தேவை. கலைத் துறையினர் அதிகம் சிரமப்படாமல் நன்மையடைவார்கள். சிறப்பாக பணிபுரிந்து மேலதிகாரியிடம் பாராட்டு, பரிசைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். பெண்களுக்கு அரசாங்கத்தின் மூலம் உதவி கிடைக்கும். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள். பழைய கடனில் சிறு பகுதியை அடைப்பீர்கள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். நீண்ட கால பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

பரிகாரம் : பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.

மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளை சந்திக்கும் சூழல் ஏற்பட்டாலும் அதிலிருந்து எளிமையாக விடுபடுவீர்கள். மகளிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். கலைத்துறையினர் சிறு ஏமாற்றங்களுக்கு உள்ளாகலாம். பெண்கள் புகுந்த வீட்டின் பெருமையை பாதுகாப்பர். அரசுப் பணியாளர்கள் முன்கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. மாணவர்கள் பொழுது போக்குகளில் அதிக ஆர்வம் கொள்வர்.

பரிகாரம் : அம்பாள் வழிபாடு மகிழ்ச்சி அளிக்கும்.

எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு திருப்திகரமாகும். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஆகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அலுவலக பணியாளர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். பெண்கள் அடுத்தவர் கஷ்டங்களை புரிந்து கொண்டு உதவி செய்து நற்பெயரும், பாராட்டையும் பெறுவர். உடன்பிறந்தவர்களுக்கு வேலை கிடைத்து சந்தோஷம் அடைவீர்கள்.

பரிகாரம் : மகாலட்சுமி வழிபாடு சகல நன்மை தரும்.

எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சில துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். எழுத்து, ஓவியம் போன்ற கற்பனை துறையைச் சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. மேலதிகாரிகள் முக்கிய விவகாரங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். முக்கியச் செலவுக்காக பணம் புரட்ட முடியாமல் தவித்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவியை பெறுவீர்கள்.

பரிகாரம் : ஐயப்பன் வழிபாடு வெற்றி அளிக்கும்.

எதிர்பாராத பல நன்மைகளை பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். பிரிந்து சென்ற நண்பர்கள் உங்களின் குணம் அறிந்து மீண்டும் வந்து இணைந்து கொள்வார்கள். நிலுவைக் கடன்கள் வசூலாகும். வியாபாரிகள் தங்களின் சாதுார்யமான பேச்சினால் வாடிக்கையாளர்களை கவர்ந்து நல்ல லாபத்தை பெறுவர். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுத்தாலும் அதனை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்த பிறகே செயல்படுத்துவது நல்லது. பெண்கள் அலங்காரப் பொருட்களின் மீது அதிக ஆர்வம் கொள்வர். புதுவீடு மாறும் சூழல் உருவாகும். சமூகத்தில் உங்களின் மீதான மதிப்பு, மரியாதை உயரும்.

பரிகாரம் : சிவன் வழிபாடு சங்கடம் போக்கும்.

புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். கணவன், மனைவி இடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு பின் மறையும். பணியிடத்தில் எதிர்கொள்ளும் கசப்பான சூழல்களை எண்ணி வருத்தப்பட வேண்டாம். அது நிரந்தரமானது அல்ல. இன்பச் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற எண்ணம் பிறந்தாலும் அது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் தரும் வாய்ப்புகள் அமையும். வியாபாரம் தொடர்பான வழக்குகள் தள்ளிப்போகாலம். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

பரிகாரம் : குருவாயூரப்பன் வழிபாடு நிம்மதி தரும்.

விரக்தி மனப்பான்மை மாறி சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். பணியாளர்கள் கூடுதலாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை பெறுவர். குடும்பத்தினருடன் சிறு அளவில் பிரச்னைகள் ஏற்பட்டுச் சரியாகும். பெண்கள் மற்றவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்க வேண்டாம். மாணவர்கள் சிலர் வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல புத்தகங்களை படித்து புது விதமான அனுபவத்தை பெறுவர். சகோதர, சகோதரியின் பொருளாதார பிரச்னைகளை சரிசெய்து நிம்மதி அடைவீர்கள். தியானம், பிடித்த இசையைக் கேட்பதன் மூலம் மனஅமைதியை பெறலாம்.

பரிகாரம் : நரசிம்மர் வழிபாடு சிரமத்தை போக்கும்.

எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். தங்களுக்கு கீழ் பணிபுரிபைவர்களைக் கருணையுடனும், அன்புடனும் நடத்துவீர்கள். பெண்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் கொள்வர். வியாபாரிகளுக்கு நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். திட்டமிட்ட செயல்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். கலைத் துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டிவரும். உறவினர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்பத்தினரின் மனக்கசப்புக்கு ஆளாக வேண்டாம். பூர்வ சொத்து சம்மந்தப்பட்ட வகையில் பணவரவு உண்டு.

பரிகாரம் : ராமர் வழிபாடு சுபவாழ்வு தரும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here