உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தார் டைரக்டர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்மகள் வந்தாள் சீரியல் 100 எபிசோட்களை கடந்து விட்டது. இந்த சீரியலின் நாயகி புதுமுகம் ஆயிஷா. கேரளாவை சேர்ந்தவர். திடீரென சீரியலில் இருந்து விலகி விட்டார்.

காரணத்தை கேட்டோம். “சென்னைக்கு படிக்க வந்தபோதுதான் இந்த வாய்ப்பு வந்தது. ஆனால் அடிக்கடி இயக்குனர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது மூன்றாவதாக நம்பிராஜா வந்திருக்கிறார். மற்ற ஆர்ட்டிஸ்டுக்களுக்கு கொடுக்கும் மரியாதைகூட எனக்கு கொடுப்பதில்லை. புதுமுகம் என மரியாதை குறைவாக நடத்தினார். ஒருநாள் மணக்கோலத்தில் நடிக்கும் காட்சி. அதற்காக நிறைய அலங்காரம், மருதாணி வைக்கிறதென நேரம் எடுத்தது.

நான் அறைக்குள் ரெடியாகிக் கொண்டிருந்தபோது, இயக்குனர் திடீரென உள்ளே வந்து கத்த ஆரம்பித்தார். நான் பாதி கட்டின சேலையோடு நின்றேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அன்று பயங்கரமாக அழுதேன். அதையும் சமாளித்துக் கொண்டு ஒன்றரை மாதம் நடித்தேன். திடீரென விஜய் டிவியிலிருந்து அழைத்து, இயக்குனர்-புரெடியூசர் தரப்பிலிருந்து பயங்கர அழுத்தம், அதனால் உங்களை நீக்குகிறோம் என்றார்கள். எந்த தப்பும் செய்யாத என்னை ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here