வர்த்தகருடன் உல்லாசமாக இருந்த புதுக்குடியிருப்பு பெண்: வீடியோ எடுத்து மிரட்டியவர்கள் சிறையில்!

வெளிணவன் இருக்க, புதுக்குடியிருப்பு வர்த்தகருடன் கள்ளக்காதல் உறவை வைத்திருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்தவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்த சமயத்தில் வீடியோ எடுத்து. மிரட்டி பணம்பறிக்க முயன்றபோதே இந்த கும்பம் கைது செய்யப்பட்டிருந்தது.

கடந்த மாதம் 23ம் திகதி புதுக்குடியிருப்பை சேர்ந்த இளம் குடும்ப பெண் ஒருவரும், நகரிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரும் வாகனமொன்றில் வலைஞர்மடத்திற்கு உல்லாசமாக சென்றுள்ளனர். இந்த பெண்ணின் கணவன் வெளிநாட்டில் இருக்கிறார். இவர்களின் கள்ளக்காதல் நடவடிக்கையை சிலகாலமாக அவதானித்த கும்பல் ஒன்று, வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்களை வழிமறித்து மிரட்டியுள்ளனர். அப்பொழுது இருவரையும் வீடியோவும் எடுத்தனர்.

இருவரது தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொண்ட கும்பல், கடந்த 26ம் திகதி அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, காணொளியை வெளியிடாமல் இருப்பதெனில் பணம் தர வேண்டுமென மிரட்டியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு வர்த்தகரும், குடும்ப பெண்ணும் இணைந்து மூன்ற இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து, அந்த வீடியோவை அழிக்க செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 30 திகதி இன்னொரு கும்பல், புதுக்குடியிருப்பு வர்த்தகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பத்து இலட்சம் பணம் தராவிட்டால், அந்த வீடியோவை இணையத்தளங்களில் பதிவேற்றவுள்ளதாக மிரட்டியுள்ளனர்.

பத்து இலட்சம் பணம் உடனடியாக திரட்ட முடியாது, முதலில் ஒரு இலட்சம் தருகிறேன், பின்னர் மீதுி பணத்தை தருகிறேன் என அவர் சொன்னதை மிரட்டல் கும்பல் ஏற்றுக்கொண்டது. புதுக்குடியிருப்பு சிறீ சுப்ரமணிய வித்தியசாலைக்கு முன்பாக 02ம் திகதி பணத்துடன் வருமாறு வர்த்தகருக்கு சொல்லப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை வர்த்தகர் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தெரியப்படுத்தினார். சம்பவ தினத்திலன்று சிவில் உடையில் நின்ற பொலிசார், பணம் வாங்க வந்த இரணைப்பாலை வாசியை கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பணப்பறிப்பில் ஈடுபட்ட மேலும் ஆறு ரௌடிகளை கைது செய்தனர்.

கடந்த 3ம் திகதி இவர்களை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, ஒருவரை மாத்திரம் பிணையில் விடுவித்து, மற்றவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று 11ம் திகதி அவர்கள் மீண்டும் முற்படுத்தப்பட்டபோது, மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here