அரசாங்கத்தின் சகல பொறுப்பிலிருந்தும் விலகுகிறோம்: குறூப் 16 அதிரடி அறிவிப்பு!

0

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 16 உறுப்பினர்களும் அரசாங்கத்தின் சகல பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர். அமைச்சர் லக்ஸ்மன் யப்பா அபேவர்த்தன சற்று முன் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.

தமது முடிவிற்கு ஜனாதிபதியின் சம்மதமும் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

தமது சுய கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காகவே பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here