தாம்பத்திய பிரச்சனைகளிற்கு தீர்வுகள்: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 28


மதிவதனி (25)
அவிசாவளை

தாராளமாக. கர்ப்ப காலத்தின் ஒன்பதாவது மாதம் வரை உடலுறவுவைத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு கர்ப்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை மகப்பேறு மருத்துவர் தெரிவிக்க வேண்டும்.

டாக்டர் ஞானப்பழம்: மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள், குழந்தையும் மிக ஆரோக்கியமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது, கருச்சிதைவு, கருக்கலைவு போன்றவற்றுக்கு வாய்ப்பு இல்லை என வைத்தியர் உறுதியாகத் தெரிவித்திருந்தால், தாராளமாக உடலுறவு வைத்துக்கொள்ளலாம்.

ஏற்கெனவே, கருத்தரித்தபோது, குழந்தை முன்கூட்டியே பிறந்திருந்தால், கர்ப்பப்பை வாய் சற்றுத் தளர்வுற்று இருந்திருந்தால், எடை குறைவாகக் குழந்தை பிறந்திருந்தால், ஏற்கெனவே கருச்சிதைவு அல்லது கருக்கலைத்தல் செய்திருந்தால், ஸ்பொட்டிங் எனப்படும் துளித்துளியான இரத்தக்கசிவு, பிளீடிங் இருந்தாலோ, உடலுறவு வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பிளசன்டா ப்ரேவியா (Placenta praevia) எனப்படும் கருப்பையின் முகத்துவாரத்தை பிளசன்டா அடைத்திருக்கும் நிலையிலும் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். உடலுறவு வைத்துக்கொள்ளும்போது, ஆணின் எடை பெண்ணின் வயிற்றின் மீது அழுத்தக் கூடாது. வேகமாக ஈடுபடுவதையும், ஓரல் செக்ஸையும் தவிர்க்க வேண்டும். இருவரும் ஜனன உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.

இன்னொரு விடயம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகம் பயப்பிடுவது, போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு. போக்குவரத்தில் ஈடுபட்டால் கர்ப்பம் கலைந்து விடும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால், பயணம் மேற்கொண்டதால் கர்ப்பம் கலைந்தது என எந்தத் தகவலும் இல்லை. ஆனால், பயணம் மேற்கொள்வது சரியா என்பதை கர்ப்பிணிதான் முடிவுசெய்ய வேண்டும். அவரைத் தவிர வேறு யாராலும் சரியானதைத் தேர்வுசெய்ய முடியாது.

இருப்பினும், இருசக்கர வாகனம், ஆட்டோ போன்றவற்றில் பயணிப்பதைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாகனங்களில் அதிர்வைத் தாங்கக்கூடிய அமைப்புச் சரியாக இல்லை. மேலும், நம்முடைய வீதிகளில் சிலவும் அந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இல்லை. பஸ்ஸில் பயணிப்பது பாதுகாப்பானதுதான். இருப்பினும், பஸ்ஸில் சக்கரங்களுக்கு நேர் மேலே அமர்வதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள், ரயில் மற்றும் விமானத்தைத் தேர்வு செய்யலாம். அதுவும் எட்டாம் மாதம் வரை மட்டும்தான். ஒன்பதாம் மாதம் முதல் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

அலுவலகத்துக்குச் செல்வதில் தவறு இல்லை. ஆனால், அலுவலகப் பணியால் அதிகச் சோர்வு, களைப்பு போன்ற பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுவாசித்தலில் சிரமம், காலில் வீக்கம், உயர் இரத்த அழுத்தம், கர்ப்பம் கலைய வாய்ப்பு உள்ளவர்கள், கட்டாயம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும். மற்றவர்கள் பிரசவம் வரையில் அலுவலகம் செல்வதில் பிரச்னை ஏதும் இல்லை.

எம்.தபேந்திரன் (31)
உருத்திரபுரம்

எனக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களாகிறது. குழந்தைகள் இல்லை. சில சமயங்களில் என்னால் மனைவியுடன் உடலுறவு கொள்ள முடிவதில்லை. உடலுறவுக்கு இருவரும் தயாராகி, முக்கியமான தருணத்தில் சில சமயங்களில் முடியாமல் போய் விடும். ஏன் இந்த பிரச்சனை? இதற்கு தீர்வு உள்ளதா? நான் என்ன சிகிச்சை பெற வேண்டும்?

டாக்டர் ஞானப்பழம்: இதைப் பொதுவானது என வகைப்படுத்த முடியாது. ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு தம்பதிக்குமே பிரச்னைகள் வேறுபடும். இருப்பினும், பொதுவாகக் காணப்படும் பிரச்னைகளை அடிப்படையாகக்கொண்டு ஓர்கானிக் (உடல் சார்ந்த பிரச்னை), சைக்கோஜெனிக் (உணர்ச்சி, மனம் சார்ந்த பிரச்னை) மற்றும் சமூக – கலாசார பிரச்னை என்று பிரிக்கலாம். குறிப்பிட்ட ஒரு காரணியால்தான் பாலியல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டது என்று கூற முடியாது. பல்வேறு பிரச்னைகளின் கூட்டுக் காரணமாகவும் இவை ஏற்படுகின்றன.

மற்ற உடல்நலப் பிரச்னைகளைப் போலத்தான் பாலியல் பிரச்னைகளும். மற்ற உடல்நலக் குறைபாடுகளுக்கு எப்படி சிகிச்சை பெறுகிறோமோ, அதைப் போன்றதுதான் இதுவும். இதை வித்தியாசமான பிரச்னையாகக் கருத வேண்டாம். பாலியல் பிரச்னைக்கு நீங்கள் வைத்தியரை சென்று சந்திக்கும்போது, அவர் உங்களுக்கு உள்ள பிரச்னை, அதன் தன்மை, எவ்வளவு நாளாகப் பிரச்னை உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்களைக் கேட்டுக் குறித்துக்கொள்வார். (பொதுவாக, தம்பதியராகச் சென்று மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது) அதன் அடிப்படையில் சில உடல் பரிசோதனைகளைச் செய்வார். அதைத் தொடர்ந்து தேவைப்படும் மருத்துவப் பரிசோதனைக்குப் பரிந்துரைப்பார். அது, அவரவர் பிரச்னையைப் பொறுத்து மாறுபடும்.

பரிசோதனைகளில் பயோகெமிக்கல் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, பீனியல் ஹீமோடைனமிக் ஸ்டீஸ், நரம்பு தொடர்பான ஆய்வு, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, டாப்ளர் பரிசோதனை, ரெஜிஸ்கேன், உளவியல் பரிசோதனைகள் என சில பரிசோதனை முறைகள் உள்ளன. இவை அனைத்தையும் செய்யும்படி வைத்தியர் பரிந்துரைக்க மாட்டார். நோயாளியின் பிரச்னை மற்றும் அவர் மேற்கொண்ட உடலியல் பரிசோதனை அடிப்படையில் தேவையான சில பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார்.

நீங்கள் தயக்கமின்றி ஒரு வைத்தியரை அணுகுங்கள்.

அபிஷா (21)
கற்குழி, வவுனியா

நான் 4 மாத கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்பகாலத்தில் மாத்திரை பாவிக்க வேண்டாம் என்கிறார்கள். காய்ச்சலுக்கும் மாத்திரை போடக் கூடாதா? கர்ப்பத்தின் பின்னர் எனக்கு உடம்பு சற்று வைத்து விட்டது. எப்படி குறைப்பது? உடற்பயிற்சி செய்யலாமா?

டாக்டர் ஞானப்பழம்: நடைப்பயிற்சி செய்வதே மிகப் பெரிய பயிற்சி. உடற்பயிற்சி நல்லதுதான். ஆனால், தீவிரமான பயிற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும், உங்களுக்கு எந்த மாதிரியான பயிற்சி சரியாக இருக்கும், பயிற்சி செய்யலாமா, வேண்டாமா என்பதை எல்லாம் மகப்பேறு மருத்துவரிடம் கேட்டு, அதன்படி நடப்பது நல்லது.

கர்ப்ப காலத்தில் வைத்தியர் பரிந்துரை இன்றி எந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. எதற்காகவும் சுய மருத்துவம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வைத்தியர் பரிந்துரை இன்றி எந்த ஒரு மருந்து, ரொனிக்கையும் எடுக்க வேண்டாம். இந்த மருந்துகள் கருவின் வளர்ச்சி யில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ள காலத்திலும் கர்ப்ப காலத்திலும் குறிப்பாக, முதல் மூன்று மாதங்களில் பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கக்கூடிய மருந்து மாத்திரைகளைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். கர்ப்பம் தரித்ததில் இருந்து மூன்று மாதங்களுக்கு வளர்ந்து கொண்டிருக்கும் கருவுக்கு ‘எம்ப்ரியோ’ என்று பெயர். இந்த முதல் மூன்று மாதங்கள்தான் எம்ப்ரியோ வளர்ச்சிக்கு மிகமிக முக்கியம். இந்தக் காலகட்டத்தில்தான் முக்கிய உறுப்புகளான இதயம், மூளை உள்ளிட்டவை உருவாகின்றன.

எனவே, இந்தக் காலக்கட்டத்தில் எக்ஸ்-ரே எடுப்பது, விபத்து, இரசாயனப் பாதிப்பு என எந்த ஒரு பிரச்னையும் தாய்க்கு ஏற்படக் கூடாது. இவை வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கக்கூடும். இந்தக் காலகட்டத்தில் அதிகப்படியான குமட்டல், வாந்தி போன்ற மோர்னிங் சிக்னஸ் இருக்கும். மார்பகம் பெரிதாகத் தொடங்கும். இதனால், மார்பகம் எடை கூடிய உணர்வு இருக்கும். இந்தக்காலத்தில் உடற்பயிற்சியின் மூலம் உடம்பை குறைக்கலாம். ஆனால் இயற்கையாக பருமனாகுபவற்றை தடுக்க முடியாது.

கடந்த பாகத்தை படிக்க: கர்ப்பத்தை வீட்டிலேயே அறிந்து கொள்ளலாமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here