சென்னை மக்களை நன்கு அறிவோம்: அரசியல் குண்டர்களே காரணம்: ரவிந்திர ஜடேஜா ஆவேசம்

சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படுவதற்கும், தன் மீது செருப்பு வீசப்பட்டதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவிந்திர ஜடேஜா ஆவேசமாக ட்விட் செய்துள்ளார்.

காவிரி நதி பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேம்பாட்டு வாரியத்தை அமைக்கக் கோரி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராடி வருகின்றனர்.

இந்த சூழலில் ஐபிஎல் போட்டிகள் நடத்தினால், காவிரிக்கான போராட்டம் நீர்த்துப்போகும் என்று ஆதலால், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.

இந்த போட்டியின் இடையே மைதானத்தில் பீல்டிங் செய்திருந்த சென்னைசூப்பர் கிங்ஸ் வீரர் ரவிந்திர ஜடேஜா மீது ரசிகர் போர்வையில் வந்திருந்த சிலர் செருப்புவீசினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் நடந்தது.

இதனால், சென்னையில் அடுத்தடுத்து வரும் ஐபிஎல் போட்டிகளை நடத்த ஏதுவான சூழல் நிலவவில்லை எனக் கருதி அவற்றை மாற்ற ஐபில் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இந்தசூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவிந்திர ஜடேஜா ஆவேசமாக ட்விட் செய்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் என்மீது செருப்பு வீசப்பட்டது, பாட்டில்கள் போன்றவை வீசப்பட்டதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இதைக் கடந்துதான், நாங்கள் போட்டியில் பங்கேற்று விளையாடி இருக்கிறோம்.

சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்துக்கு ஒட்டுமொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களையும், ஒட்டுமொத்த சென்னை மக்களையும் இதற்கு நான் குறைகூறவிரும்பவில்லை.

அரசியல்வாதிகள் தங்களின் பணவலிமையை பயன்படுத்தி, சில குண்டர்கள் மூலம் போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்.

தங்களின் உரிமைக்காக போராட்டத்தை எந்தஅளவுக்கு கட்டுக்கோப்புடன், ஒழுக்கமாக, அஹிம்சை வழியில் நடத்த வேண்டும் என்பதை ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது சென்னை மக்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆதலால் அவர்களை நான் குறைகூறவில்லை

இவ்வாறு ரவிந்திரஜடேஜா தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here