மில்லியன் கணக்கான பணத்தை சாலையில் வீசிய பெண்!

தென் கொரியாவில் காரில் சென்ற பெண்ணொருவர், மில்லியன் கணக்கான பணத்தை சாலையில் வீசி சென்ற வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தென் கொரியாவின் டேகு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தன்னிடம் உள்ள பணத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.
இதற்காக நகரத்தின் 11 இடங்களுக்கு காரில் சென்ற அவர், அங்குள்ள சாலைகளில் பணத்தை வீசியுள்ளார். மக்கள் அந்த பணத்தை எடுப்பர் என அவர் நினைத்திருந்தார்.

ஆனால் மில்லியன் கணக்கில் பணத்தை சாலையில் கண்ட மக்கள் ஆச்சரியம் அடைந்தாலும் எவரும் அதனை எடுக்கவில்லை. அதற்கு மாறாக போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் சாலையில் வீசப்பட்ட பணத்தை கைப்பற்றினர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here