அல்ஜீரியா: ராணுவ விமானம் மோதி 257 பேர் பலி

0

அல்ஜீரியாவில் ரணுவ விமானம் மோதியதில் குறைந்தது 257 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 14 அவசர மருத்துவ ஊர்திகள் உள்ளதாகவும், காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் உள்ளூர் தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

புதன்கிழமை காலையில் தலைநகர் அல்ஜீரஸூக்கு அருகிலுள்ள பௌஃபிரிக் ராணுவ விமான படைத்தளத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து புகை வெளிவருவது இந்த விமான விபத்தின் காணொளி காட்டுகிறது.

இந்த விமானம் மோதியது தொடர்பாக, விசாரணைக்கு ஆணையிட்டுள்ள படைத்தலைவர், சம்பவ இடத்தை பார்யிடுவார் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

4 ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரிகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினரையும் ஏற்றி சென்ற விமானம் ஒன்று மோதியதில், 77 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here