ஓகஸ்ட் 09ம் திகதி வரை டெனீஸ்வரனே அமைச்சர்: இடைக்கால தடை நீடிக்கப்பட்டது!

வடக்கு அமைச்சர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது சட்டவிரோதமானதென பா.டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்கின் மீது, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் 9ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சமயத்தில், இந்த இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

டெனீஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது முறையற்றது என கூறி, அவரை நீக்கிய முதலமைச்சரின் உத்தரவிற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, மேன்முறையீட்டு நிதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவிற்கு எதிராக முதலமைச்சர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையின் போது, முதலமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இதனை குறிப்பிட்டனர்.

இதையடுத்து, வரும் 9ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here