ஸ்ரீரெட்டியை ஆசைகாட்டி மோசம் செய்து விட்டனர்

தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை சுமத்தி வரும் நடிகை ஸ்ரீரெட்டி குறித்து நடிகர் மயில்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். அதையடுத்து சில தெலுங்கு பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ஸ்ரீரெட்டி, தெலுங்கு நடிகர் சங்கம் அலுவலகம் முன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது தமிழ் திரை பிரபலங்களை டார்கெட் செய்துள்ள ஸ்ரீரெட்டி முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை சுமத்தி வருகிறார். தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் உலா வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் தமிழ் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீரெட்டி கூறி வரும் பாலியல் புகார் குறித்து நடிகர் மயில்சாமி மனம் திறந்துள்ளார். சினிமா மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாகவும், திரைத்துறையிலும் நடிகைகளுக்கு ஏற்படுவதாக கூறினார்.

மேலும், திரையுலகில் நடிகைகளை அட்ஜஸ்ட் செய்துக் கொள்ள எதிர்ப்பார்க்கும் பிரபலங்களும், அதற்கு ஒப்புக் கொள்ளும் நடிகைகளும் உள்ளனர். வாய்ப்புக்காக சிலவற்றை செய்யக் கூடாது என்றும், கன்னியமாக திறமை இருப்பவர்களிடம் வேலை வாங்கும் இயக்குநர்களும் இருப்பதாக மயில்சாமி தெரிவித்தார்.

ஸ்ரீரெட்டியை ஆசைக்காட்டி ஏமாற்றியதால் இப்படி ஒவ்வொரு இடத்திலும் அவர் நீதி கேட்கிறார் என்றும், முதல் முறை அவர் பாதிக்கப்பட்டபோதே புகார் கொடுத்திருந்தால் இவ்வளவு நேர்ந்திருக்காது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here