5 மாத கருவை பையில் கொண்டு போன இளம்பெண்!

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர், 5 மாத கருவை காவல் நிலையத்துக்கு எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோ அருகே உள்ள ஹசன்புர் போலீஸ் நிலையத்துக்கு இளம் பெண் ஒருவர், ஒரு பையுடன் வந்துள்ளார். துர்நாற்றம் வீசிய அந்தப் பைக்குள் 5 மாத கரு ஒன்று இருந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, சில மாதங்களுக்கு முன், ஒரு இளைஞர் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதாகவும், திருமணம் செய்ய மறுத்ததால், தனது 5 மாத கருவை கலைத்ததாகவும் கூறினார்.

மேலும், கருவைப் பையில் எடுத்து வந்திருப்பதாகவும் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்தப் பெண் புகார் அளித்தார். இதையடுத்து, கருவைப் பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here